முன்னணி நடிகர்களான விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று திரைக்கு வந்தது. இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் வைத்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் இருக்கும் ஒரு தியேட்டரில் துணிவு படம் திரையிடப்பட்டது. அங்கு ரசிகர்கள் ஒரே பேனராக வைத்து அசத்தியுள்ளனர்.

அந்த பேனரில் “நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது குறித்த ரசிகர்கள் கூறியும்போது, நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னிமலையில் ஒரே தியேட்டர்தான் இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைய கூடாது என்பதற்காக அவருக்கும் சேர்த்து பேனர் வைத்துள்ளோம் என கூறியுள்ளனர்.