தமிழின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலகம் போற்றும் அளவிற்கு எழுதியவர் தான் திருவள்ளுவர். இவரின் கருத்துக்களை உலக மக்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திருக்குறள் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்றும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து அணைத்து மாவட்டங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.