
பிரபல நடிகரான அஜித் மகள் திருமணி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்தது. படம் ஆரம்பத்திலிருந்து ஏராளமான சிக்கல்களை தாண்டி இப்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அஜித் கார், பைக் ரேஸ் ஆகியவற்றில் அதிக ஆர்வம் உடையவர். பைக்கில் பல ஊர்களுக்கு சென்று தனது நேரத்தை செலவிடுவார். இந்த நிலையில் போர்ச் GT3 RS ரகு சொகுசு காரை அஜித் புதிதாக வாங்கியுள்ளார். அதன் விலை 4 கோடி ரூபாய் ஆகும். இந்த கார் 3.2 நொடியில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. முன்னதாக அஜித் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள பெராரி சொகுசு காரை வாங்கினார். இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.