தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த “இளைய தளபதி” விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வருத்தத்தை அளித்தது. ஏனென்றால் விஜய் நடிப்பில் வெளியான படம் என்றாலே மார்க்கெட்டில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படம் 30 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்றும், அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர்  அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து சினிமாவிலும் படங்களை நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினார்.