செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள்முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் வருவதற்கு முன்பாக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்  போது இன்றைய முதலமைச்சர்,  அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிவிப்பில் இடம் பெற்றதை தான் இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர், அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அதை நிறைவேற்றுவது இந்த அரசினுடைய கடமை.

ஏற்கனவே ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து பல நாட்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.   அதை இந்த அரசு பரிசீலித்து,  அவர்கள் அறிவித்த அறிவிப்பின்படி இன்றைய இடைநிலை ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன். தமிழகத்தில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி என ஏதன் அடிப்படையில் அவர் சொல்கின்றார் என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.

மக்களிடத்தில் கேளுங்க. யாருக்கு யார் எதிரி என்று கேளுங்கள் ? மக்கள் தெளிவாக சொல்லுவாங்க. அண்ணா திமுக தான் பிரதான எதிர்க்கட்சி. 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கட்சி. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்களிடத்திலே மிகப்பெரிய நன்மை செய்து,  மக்களிடத்திலே மிகப்பெரிய வரவேற்பு இருக்கின்ற கட்சி. ஆகவே வேண்டும் என்று திட்டமிட்டு சில பேர் சொல்கிறார்கள் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என தெரிவித்தார்.