அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கீழமை நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்குகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மார்ச் மாதம் 26-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி அலுவலர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ரூ.25,000 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான விண்ணப்பத்தை பெற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.