தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இதில் எந்த கட்சி எதிர்க்கட்சி என தொகுப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு கட்சியும் கிடையாது எனக் கூறியுள்ளார். அதன் பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலினா இல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று முதல்வர் கூறினார். மேலும் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறுவாரா இல்லை ராகுல் காந்தி வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு அது மக்கள் முடிவு என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.