அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக மாறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பொதுக்கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தின் போது நிரந்தர பொதுச் செயலாளர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு பொது குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பாஜக கூட்டணி விவகாரம் போன்றவைகள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.