சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்தன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கவின். இதன்பின் திரைப்படங்களில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து வந்த நிலையில் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்றார். இதன் பின் இவர் நடித்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தற்போது கவின் கணேஷ் கே.பாபு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்தப் படத்தில் பாக்யராஜ், அபர்ணாதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்தப் படம் சென்ற 10-ம் தேதி தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் டாடா திரைப்படத்தை பார்த்த சூரி பாராட்டி இருக்கின்றார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, கவின் நடித்துள்ள டாடா திரைப்படம் ரொம்ப நிறைவான படமாக இருக்கின்றது. தொடக்கம் முதல் முடிவு வரை செல்போன் பார்க்காமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை பார்த்து உள்ளேன். பல இடங்களில் கண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைத்திருக்கின்றார்கள். இறுதியில் கண்ணீர் வரும் அளவுக்கும் வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்திருக்கின்றார்.