குட் நைட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனரான விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் நைட். இந்த படத்தில் ஹீரோவாக ஜெய் பீம் மணிகண்டன் நடிக்க ஹீரோயினாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கின்றார். இந்தப் படத்தில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள்.

காமெடி ஜோனரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கின்றார்கள். அதில் மணிகண்டன் வித்தியாசமாக இருப்பது பலரையும் கவனம் ஈர்த்து வருகின்றது.