விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் விருந்தாக சென்ற ஜனவரி பதினொன்றாம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த இரண்டு திரைப்படங்களுமே பெரிய வெற்றியை பெற்று இருக்கின்ற நிலையில் எந்த படம் பொங்கல் வின்னர் என்ற வாதம் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றது.

துணிவு திரைப்படம் தமிழகத்தில் 55 கோடி அட்வான்ஸ் முறையில் கொடுக்க 66 கோடிகள் வரை ஷேர் வந்திருக்கின்றது. இதனால் துணிவு படத்தின் லாபம் 11 கோடி என சொல்லப்படுகின்றது. இத்திரைப்படம் 22 கோடிக்கு விற்கப்பட்டு 77 கோடி வரை ஷேர் வந்திருக்கின்றதாம்.

இதன் லாபம் 5 கோடி என சொல்லப்படுகின்றது. அதேபோல வாரிசை 60 கோடிக்கு விற்றதாக பேச்சு இருக்கின்றது. ஆனால் உண்மை என்னவென்றால் 17 கோடி லாபமாம். வெளிநாட்டில் 35 கோடிக்கு விற்கப்பட்ட வாரிசு 35 கோடி ஷேர் வந்து போட்டப்பணத்தை எடுத்து இருக்கின்றதாம்.

துணிவு திரைப்படம் 16 கோடிக்கு விற்கப்பட்டு 26 கோடி வரை சார் வந்திருக்கின்றதாம். இதனால் வெளிநாட்டில் 10 கோடி வரை லாபத்தை பார்த்துள்ளது. துணிவு லாபத்தின் அடிப்படையில் பொங்கல் வின்னர். ஆனால் வசூலை பொருத்தவரை வாரிசு தான் வின்னர் எனக் கூறப்பட்டு வருகிறது.