ஒடிசா நகரின் ஜகத்சிங்பூரில் ஜெயபாடா என்னும் பகுதியில் சூர்யகாந்த் சேத்தி என்னும் 21 வயது வாலிபர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். கல்லூரி படிப்பு படித்து வரும் இந்த வாலிபர் ஆன்லைன் விளையாட்டில் மிகவும் அடிமையாக இருக்கிறார். இவரின் மோசமான நிலையை கண்டு அவரது பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் தனது பெற்றோரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடி கொண்டு வந்தார். நேற்று கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய சூர்யகாந்த் இரவு முழுவதும் ஆன்லைன் கேமில் இருப்பதை கண்டு அவருடைய தந்தை மற்றும் தாய் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த அவர் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் உள்ள கனமான பொருட்களை தூக்கி தந்தை, தாய் மற்றும் சகோதரி மீது வீசியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர். அதன்பின் சூர்யகாந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்கள் மூவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் செய்த விசாரணையில் அவர் தனது பெற்றோரை கொன்றதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.