முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பணன் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அண்ணாமலை முதல்வர் பதவி கேட்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதற்க்கு முன்னாள் அமைச்சர் இன்னொருத்தரே பதிலடி கொடுத்துட்டாரு. அவர்கள் கட்சிக்குள்ளே அவர்களே மாத்தி மாத்தி பதிலடி கொடுத்துகிறார்கள். நான் எதுக்கு பேசணும்?  முன்னாள் அமைச்சர் இங்கொன்னு சொன்னால், முன்னாள் அமைச்சர் அங்கு ஒன்னு சொல்கிறார். நான் எதுக்கு ? எதுவுமே இல்லாத ஒரு விவசாயி கருத்து சொல்லணும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தது அதிமுகவுக்கு நல்லது என்று திமுக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் சொல்லி உள்ளார்கள் என்ற கேள்விக்கு,

இவ்வளவு நேரம் நான் சொல்லிட்டு இருக்கேன் என்னன்னா…  பாரதிய ஜனதா கட்சி தப்பான பாதையில் போதுன்னு தமிழகத்துல யாராவது ஊடக நண்பர்களோ, அரசியல் விமர்சகர்களே சொன்னார்கள் என்றால் ? அதற்க்கு நேர் எதிரான நிலைப்பாடு தமிழக பாரதிய ஜனதா கட்சி எடுக்கனும். அதுதான் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு நல்லது.

லெப்ட் போனா ரைட்டு போனும். எல்லாருக்குமே தமிழக பாரதி ஜனதா கட்சி மீது கோபம் தானே. எல்லாத்துக்கும் தெரிஞ்சுரும் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரே ஒரு எலக்சன் தேவைப்படும்.  ஒரே ஒரு எலக்சன்ல 25 சதவீதம் வாக்கு வங்கியை தாண்டி ஒரு எலக்சன்ல தமிழக பாரதிய ஜனதா கட்சி காமிச்சிருச்சின்னா… தமிழகத்தின் உடைய அரசியல் தலைகீழா மாறும். அது நிறைய பேருக்கு வேண்டாம்…  இங்க போயிருச்சு… அங்க போயிடுச்சு…

நான் கட்சி நண்பர்களிடம் சொல்வது ? தமிழகத்தில் வைக்கிறார்களோ டாப் லெவல்ல என்ன கருத்து …  அதற்கு நேர் எதிரான ஒரு டிசிசனை பாரதிய ஜனதா கட்சி எடுத்தா…  கட்சி  நல்லா இருக்குன்னு சொல்றேன். அதனால அந்த கருத்துக்கள் எல்லாம் வரவேற்கிறேன்.  காரணம் அவர்களுடைய வெறுப்பை நம்ம மேல காட்டுவது. பாரதிய ஜனதா கட்சி மேல எல்லாருக்கும் வெறுப்பு இருக்க தானே செய்து.  காரணம் இந்தியால இருக்குற சுத்தமான கட்சி இதான். அதனால இருக்கட்டும். அதை வருகின்ற நேரத்துல…  சரியான காலகட்டத்தில் பேசுவோம் என தெரிவித்தார்.