மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிழ் முன் அன்சாரி, இபிஎஸ்ஸை சந்தித்த பிறகு செய்தியாளிடம் பேசியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்ய  கோரி அவரது நெடுநாள் கோரிக்கையை தான் அவர் முன் வைத்திருக்கிறார்.

தமிழக அரசிடம் இதை முன் வைத்தோம், கண்டுகொள்ளவில்லை. அதனால் அனைத்து கட்சி தலைவர்களிடமும் இதனை வலியுறுத்தி இருக்கிறோம். அதேபோல் தான் இபிஎஸ் இடமும் வலியுறுத்தி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகியதற்கு வாழ்த்து சொன்னதாகவும்,  ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா ? என  இப்போது முடிவு செய்யவில்லை. டிசம்பர் மாதத்திற்கு மேல் அது பற்றி முடிவு செய்யப்படும் என்ற ஒரு பதிலையும் கொடுத்திருக்கிறார். பாஜக கூட்டணியை அதிமுக முறித்தது துணிச்சலான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.