மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ADMK சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்,ஏற்கனவே மத்திய நிதியமைச்சர் அவர்களை சந்திக்க தென்னை விவசாயிகளை அழைத்துக்கொண்டு சென்று கோரிக்கை மனு கொடுத்தோம். கொடுத்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காக இன்றைய தினம் நானும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏகே.செல்வராஜ் அவர்களும்,  வால்பாறை சட்டமன்ற தொகுதி அமுல் கந்தசாமி அவர்களும், தென்னிந்திய தென்னை விவசாயம் சங்கத்தின் உடைய தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்களும் வந்தோம். நிதி அமைச்சரை சந்தித்து எங்கள் மனுவை கொடுத்து வலியுறுத்தினோம்.

இது அரசியல் ரீதியாக சந்திப்பே இல்லை.  விவசாயினுடைய கோரிக்கையை வலியுறுத்தி மாநில அரசாங்கத்திடம் சொன்னோம்.  மு.க ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தோம். கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். மாநில விவசாய துறை அமைச்சரிடம் சொன்னோம். மாநில உணவுத்துறை அமைச்சரிடம் சொன்னோம்.

எந்த முன்னேற்றமும் இல்லை.  அதனால் மத்திய அமைச்சரிடம் சென்ற மாதம் டெல்லியில் சென்று நாங்கள் மனு கொடுத்தோம்.  அதை வலியுறுத்துவதற்காக மீண்டும் வந்தோம். அதை பற்றி மட்டும் தான் நான் பேசி இருக்கிறேன்.  வேறு அரசியல் எதுவும் கிடையாது. மத்திய நிதியமைச்சர் உடன் அரசியல் ரீதியாக சந்திப்பு கிடையாது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சில கோரிக்கையை முன் வைத்திருப்பதாக வந்தேன் என செய்தியாளர் சந்திப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் குறிப்பிட்டிருக்கிறார்.