ரயில் பயணம் என்றாலே பாதுகாப்பானதும், மலிவானதும், ஏழை முதல் நடுத்தரவரை அனைத்து தரப்பினரும் நம்பிக் காப்பாக பயன்படுத்தும் பொதுப் போக்குவரமாகும். தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே, பொதுமக்களின் வசதிக்காக 13,000க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கி வருகிறது. ஆனால், சமீப காலமாக சில இளஞ்சோடிகள் ரயில் பயணத்தை தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு சான்றாக, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோக்களில், ரயில் கழிப்பறைகளை ஓயோ ரூம்கள் போல பயன்படுத்தும் இளைஞர்கள் காட்சியளித்தனர். ஒரு வீடியோவில், முதலில் இளைஞர் கழிப்பறையிலிருந்து வெளியே வருகிறார், சில நிமிடங்களில் பின்னால் இளம்பெண் வெளியே வருகிறார். இது சமூக வலைதளங்களில் பரவி, நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து மற்றொரு வீடியோவும் இணையத்தில் பரவியது. அதில், ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், ஒரு இளம் ஜோடி அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, ஒழுங்கீனமாக நடந்து கொள்வது பதிவாகியுள்ளது. அந்த நபர் பெண்ணின் மீது படுத்து முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக நெட்டிசன்கள், “பொதுமக்கள் நடமாட்ட இடங்களில் இப்படியெல்லாம் நடப்பது வெட்கக்கேடா?”, “அவர்களை போலீசில் ஒப்படைக்கணும்!” என விமர்சித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் மக்களிடையே கோபம் உருவாகியுள்ளது. ரயில்வே நிர்வாகமும், “பொது இடங்களில் ஒழுங்கான நடத்தை கடைபிடிக்கப்பட வேண்டும். தனியுரிமை உள்ள இடம் அல்ல இது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என பலமுறை எச்சரித்தும், சிலர் அதைக் கடைசியாகவே எடுத்துக்கொள்வது கவலையை ஏற்படுத்தி வருகிறது.