தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது குஷி என்ற படத்திலும், சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இருக்கும் நிலையில் சமந்தாவுடன் சேர்ந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது செர்ஃபியாவில் நடைபெற்று வருகிறது. அங்கு வைத்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடிகை சமந்தா மற்றும் சிட்டாடல் படக்குழுவினர்  சந்தித்துள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் வருண் தவான் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.