தமிழ் சினிமாவில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் பேட்ட உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மேகா ஆகாஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மேகா ஆகாஷ் மலை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரின் திருமணம் குறித்து தற்போது வெளியாகி உள்ள செய்தி குறித்து மேகா ஆகாஷ் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.