தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகாவுக்கு தற்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அடிக்கடி விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் நடிகை ராஷ்மிகா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் தலைப்புடன் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ரெயின்போ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் சமந்தாவின் சாகுந்தலம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தேவ் மோகன் ரெயின்போ படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாந்தரூபன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் சூட்டிங் மே மாதம் 7-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.