இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்னும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூஜா ஹெக்டே. இதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து பான் இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தற்போது ஜன கன மன, சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் கிஷிகா பாய் கிஷிகி ஷான், தெலுங்கில் மகேஷ் பாபு என பல படத்தை பூஜா ஹெக்டே தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது அண்ணன் திருமண நிகழ்வு குறித்து பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அண்ணன் தன் உயிரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு ஒரு வார ரோலர் கோஸ்டர் ரைடு. ஆனந்தக் கண்ணீருடன் அழுதேன். குழந்தையை போல சிரித்திருக்கிறேன். அண்ணா உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அடி எடுத்து வைக்கும் போது நீங்கள் அளவு கடந்து நேசிப்பீர்கள். உங்களை முழு மனதுடன் ஒப்படையுங்கள். ஒருவருக்கொருவர் இடையே அனுமதி மற்றும் புரிதலை காண்பீர்கள் என்று நம்புகிறேன். சிவானி அழகான அற்புதமான மணமகளை குடும்பத்திற்கு வரவேற்கிறோம் என பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.