
திருச்சி மாவட்டத்தில் உள்ள மெய்கன்நாயக்கன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு ராமச்சந்திரன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராமச்சந்திரன் ஒரு மூதாட்டியின் இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆயிரம் ரூபாய் தந்தால் தான் சான்றிதழ் தருவேன்.
அப்படி இல்லையென்றால் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம சுகாதார அலுவலகம் மரணம் இயற்கையானது என்று எழுதி வாங்கி வாருங்கள் என கண்டிப்பாக கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலானது. எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.