பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் முக்கியமான ஆவணமாகும். இந்தியாவில் பொதுப் பயணிகளுக்காக வழங்கப்படும் பாஸ்போர்ட் நீல நிறத்தில் காணப்படுகிறது. இது அடிப்படை சர்வதேச பயணங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக பயன்படுகிறது.

ஆனால், பாஸ்போர்ட்டின் நிறம் அதன் வைத்திருப்பவரின் அடையாளத்தையும், அந்த பாஸ்போர்ட் வகையைப் பொறுத்து பல சலுகைகளையும் குறிக்கிறது. இந்திய அரசாங்க அதிகாரிகள், தூதர்கள் உள்ளிட்ட உயர்நிலை நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்  red நிற பாஸ்போர்ட், டிப்ளோமாடிக் பாஸ்போர்ட் என அழைக்கப்படுகிறது.

இந்த red நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விமான நிலையங்களில் வேகமான குடிவரவு செயல்முறை, விசா விலக்கு போன்ற பல சலுகைகள் உள்ளன. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பதாக கூறப்படுவதுடன், அவருக்கு UAE-வில் ‘கோல்டன் விசா’ வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு அந்நாட்டில் நீண்டகாலமாக தங்கி வாழ, வேலை செய்ய, படிக்க தகுதி அளிக்கிறது.

இதனிடையே, நடிகை பரீனிதி சோப்ராவின் கணவர், அரசியல்வாதி ராகவ் சந்தாவுக்கு அவரது அரசியல் பொறுப்புக்கேற்ப   red பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹென்‌லி பாஸ்போர்ட் குறியீட்டு பட்டியலில் கடந்த ஆண்டு 80வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 5 இடங்கள் பின் தள்ளப்பட்டு 85 ஆவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.