தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அகிலன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாகிறது. அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி இறைவன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி ஒரு புதுமுக இயக்குனரின் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறதாம். ஜெயம் ரவியின் கேரியரில் முதல்முறையாக 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மேலும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.