தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் நடிப்பில் அண்மையில் காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் ஜீவா தற்போது பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஆக்சன் திரைப்படமாக எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ராசி கண்ணா மற்றும் அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தை ஏற்கனவே ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க தொடங்கிய நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக பாதியிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.