தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் பாலா மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா வீரம் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சையின் போது நான் உயிர் பிழைப்பேனா அல்லது இறந்து விடுவேனா என்பது எனக்கு தெரியாது என நடிகர் பாலா வீடியோ வெளியிட்டு உருக்கமாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. மேலும் அறுவை சிகிச்சையை தொடர்ந்து தற்போது நடிகர் பாலா மீண்டும் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.