தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் போண்டாமணி. கடந்த 1991-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான போண்டாமணி இதுவரை 270-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்ட போண்டாமணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு பல பிரபலங்கள் உதவி செய்தனர். இந்நிலையில் நடிகர் போண்டாமணி சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகர் அஜித் எனக்கு உதவி செய்யவில்லை எனவும் ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவியதே நான்தான் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது இயக்குனர் விசி குகநாதனிடம் பேசி மைனர் மாப்பிள்ளை படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது நான் தான். ஆரம்பத்தில் அவருக்கு நான் பல உதவிகளை செய்துள்ளேன். ஆனால் அஜித் சினிமாவில் வளர்ந்த பிறகு எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கவில்லை. நான் அவரின் மேனேஜரை தொடர்பு கொண்டு பேசியபோதும் அவர் எனக்கு உதவவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் வடிவேலுவும் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனவும் அவரின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனவும் அவரை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றபோது என்னை பார்க்காமல் திருப்பி அனுப்பி விட்டதாகவும் போண்டாமணி உருக்கமாக கூறியுள்ளார்.