சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 30-ம் தேதி தமிழக வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொத்து ஆவணங்களை கணினிமயமாக்கி மேம்படுத்த வேண்டும். அதன் பிறகு வக்பு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி வருவாயை அதிகரிக்க வேண்டும். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை வக்பு வாரிய செயல்பாடுகளில் வெளிப்படுத்தன்மையை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் தலைமைச் செயலாளர் இறையன்பு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களை பதிவு செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதோடு வக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பதை தடுப்பதோடு, உலாமா நல வாரியத்தில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.