முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கி உள்ள நிலையில் தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளின் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதார் அட்டை பெறாதவர்கள் ஆதார் விண்ணப்பித்த பொழுது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் பெறுவதற்கான விண்ணப்பம் நகல் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.