சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்தது வருகிறார்.

இந்நிலையில் திருச்சி தனியார் கல்லூரியில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு லோன் ஆப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார். லோன் ஆப்பில் அதிக கடன் கடன் பெற்றால் அதிக கடன் கட்ட வேண்டும் கட்டவில்லை என்றால் உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்வார்கள். இணையத்தில் எந்த ஒரு ரகசியமும் கிடையாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.