உத்தர் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் பரபரப்பான சாலை ஒன்றில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வயதான நபர் மீது ஒரு இளைஞர் ஸ்பிரே அடிக்கிறார். இதனால் அந்த வயதான நபரின் முகம் முழுவதிலும் ஸ்பிரேயாக இருக்கிறது. தனது youtube சேனலுக்காக இளைஞர் முதியவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் படியான செயலில் ஈடுபட்டார்.

“>

 

இந்த காணொளி வைரலான நிலையில் ஜான்சி காவல்துறையினர் இளைஞரை கைது செய்தனர். சாலையில் முதியவருக்கு இளைஞர் செய்த செயலுக்கான வினையாக காவல் நிலையத்திலிருந்து இளைஞர் வெளியில் வரும் காணொளி அமைந்துள்ளது. தற்போது அந்த காணொளியை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

“>