AI சார்ட் போர்டுகளில் தற்போது நண்பர்களை போல அனைவரும் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI டெக்னாலஜியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது நமக்கு ஆபத்தானவை. அவை என்னவென்று பின்வருமாறு பார்ப்போம். AI என்பதையும் முக்கிய துறைகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இது பயனுள்ளதாக இருந்தாலும் தவறாக பயன்படுத்தினால் தீங்கு விளைவிக்கும். இந்நிலையில் சுகாதார ஆலோசனை போன்ற முக்கியமான விஷயங்களுக்கு அவற்றை நம்ப வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

1.அதில் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட விவரங்களை AI -டுடன் பகிர வேண்டாம். இதில் மோசடி செய்பவர்கள் இந்த தகவலை உங்களை அடையாளம் கண்டு கண்காணிக்க பயன்படுத்தலாம்.

2.வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு அல்லது பான் கார்டு எண்களை ஒருபோதும் பகிர வேண்டாம். ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்களது பணம் அல்லது அடையாளத்தை திருட இவற்றை பயன்படுத்தலாம்.

3.கடவுச் சொற்களை AI சேட்பாட்டுடன் பகிர்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறந்த சேவையை வழங்க உங்கள் வலைதள கணக்குகளை அணுகலாம் என்றாலும் இந்த வசதி எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

4.அதைப்போல AI சாட் பாட் நல்லதாக இருக்கிறது என்று தோன்றினாலும் ரகசியங்களை பகிர வேண்டாம் chatgpt போன்ற அரட்டை பக்கங்கள் மனித உரையாடல் மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்க முடியும். ஆனால் அவை மனிதர்கள் அல்ல, உங்கள் தகவல் பதிவு செய்யப்படுகின்றது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

5. AI செயலைகள் மற்றும் வலைதளங்கள் மருத்துவர்களைப் போல உங்களுக்கு அறிவுரை வழங்கலாம். ஆனால் உங்கள் உடல் நல பிரச்சனைகளை அங்கு கூற வேண்டும். சாட் பாட்டுகளிடம் சிகிச்சை அல்லது மருந்துகள் பற்றி கேட்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், காப்பீடு எண்கள் அல்லது சுகாதார விவரங்களை பகிரக்கூடாது.

6.உங்கள் தகவலின் அடிப்படையில் விவரங்களை வழங்குகின்றன. தகவல் இணையதளத்தில் வந்தவுடன், அது உண்மையில் ஒருபோதும் நீக்கப்படாது. நீக்கிய பிறகும் அது எங்காவது நீடிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

7.செயற்கை நுண்ணறிவு AI சேட் பாட்ட்கள் உங்கள் உரையாடல்களை சேமித்து பகிரலாம் நீங்கள் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் எதையும் அவர்களிடம் சொல்லக்கூடாது.