இந்தியாவில் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டான அந்தோர்பிக் (Anthropic) நிறுவனத்தின் கிளாட் (Claude) சேவை, செவ்வாய்க்கிழமை மதியம் திடீரெனப் பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

​இணையதள முடக்கங்களைக் கண்காணிக்கும் ‘டவுன் டிடெக்டர்’ (Downdetector.in) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கிளாட் சாட் (Claude Chat) பயன்படுத்தும் 61% பயனாளர்களும், அதன் மொபைல் செயலியைப் பயன்படுத்தும் 21% பயனாளர்களும், இணையதளத்தைப் பயன்படுத்தும் 13% பயனாளர்களும் இந்தச் சேவை பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பயனாளர்கள் தங்களது கேள்விகளை அனுப்பும்போது, “Due to unexpected constraints, Claude is unable to respond to your message” (எதிர்பாராத தடங்கல்கள் காரணமாக, கிளாட் உங்கள் செய்திக்கு பதிலளிக்க இயலவில்லை) என்ற அலர்ட் மெசேஜ் மட்டுமே திரையில் தோன்றுவதாகச் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட்களுடன் நெட்டிசன்கள் தங்களது குமுறல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

​முடக்கத்திற்கான பின்னணி காரணம்:
இந்த திடீர் முடக்கத்திற்குப் பின்னணியில் ‘கிளாட் கோட்’ (Claude Code) என்ற டூலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு (Bug) தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் சப்-ஏஜென்ட் சிஸ்டத்தில் ஏற்பட்ட பக் காரணமாக, பயனாளர்களின் பயன்பாட்டு வரம்பான டோக்கன்கள் (Tokens) மிக வேகமாகக் தீர்ந்துள்ளன.

இதனால் பிரீமியம் (Paid) யூசர்களின் கணக்குகளும் நிமிடங்களில் முடங்கியுள்ளன. தற்போது இந்தக் கோளாறை அந்தோர்பிக் நிறுவன இன்ஜினியர்கள் கண்டறிந்து சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட பயனாளர்களின் பயன்பாட்டு லிமிட்டை அவசரமாக ரீசெட் (Quota Reset) செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.