தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்த லட்சுமி என்பவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன். ஐஸ்வர்யா தன் அம்மாவை போன்றே தமிழ்,தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து உள்ளார். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படம் வாயிலாக தமிழில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், பாக்யராஜ் இயக்கத்தில் வெளியாகிய ராசுக்குட்டி படம் மூலம் பிரபலமானார். அதன்பின் ரஜினியுடன் எஜமான், கமலுடன் பஞ்சதந்திரம் போன்ற ஹிட் படங்களிலும் நடித்து இருந்தார் ஐஸ்வர்யா.

இப்போது திரையுலகில் அக்கா,அம்மா,அண்ணி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. இவர் சூர்யாவின் ஆறு படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமானார். ஹரி இயக்கத்தில் வெளியாகிய இந்த படத்தில் சவுண்டு சரோஜா என்ற கேரக்டரில் நடித்ததால் மிக பிரபலமானார். இவ்வாறு ஐஸ்வர்யா படங்களில் நடித்து வந்தாலும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதாவது, சோப்பு மற்றும் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தற்போது இவர் வாட்ஸ்அப்-ல் ஆபாச படம் அனுப்பி படுமோசமான மெசேஜ் செய்த நெட்டிசன்களின் புகைப்படத்தை வீடியோவில் காட்டியுள்ளார்.

யூடியூப் சேனலில் ஆர்டரை பெற வாட்ஸ்அப் நம்பரை போட்டதிலிருந்து தொடர்ந்து ஆபாச மெசேஜ் வந்துகொண்டே இருக்கிறது. சில ஆண்கள் மிகவும் ஆபாசமாக மெசேஜ் செய்கின்றனர். சிலர் நான் உன்ன வாங்களானு பார்த்தேன், வயசு ஆனாலும் சும்மா கும்முனு இருக்க என தன்னுடைய ஆபாச போட்டோ எடுத்து அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தெரியலையா. 52 வயசு கிழவிடா நானு. இங்கே ஒன்னும் கிளாமர் ஆடலடா மானங்கெட்ட பசங்களா. நான் சோப்பு தான் விற்கிறேன், என்னை விற்கவில்லை என்று கூறி உள்ளார்.