தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பங்கேற்று பேசியதாவது “அ.தி.மு.க என சொல்லி சிலர் வேஷம்போட்டு வருகிறார்கள். நானும் ரவுடிதான் என நடிகர் வடிவேலு காமெடி காட்சியில் பேசுவது போல் அவர்கள் பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதை போன்று அவரை நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். அதிமுகவை தற்போது காப்பாற்றி வருவது எடப்பாடி பழனிச்சாமி தான்.
ஆயிரம் எதிரிகளைகூட சமாளித்து விடலாம், ஆனால் ஒரு துரோகிய சமாளிப்பது என்பதுதான் சங்கடம். கட்சிக்கு ஒரே தலைமை அது எடப்பாடி பழனிச்சாமி என்ற நிலைப்பாட்டினை 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால், அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். இரட்டை இலையை வீழ்த்த எந்த சக்தியும் இல்லை. இரட்டை இலை நிச்சயமாக கிடைக்கும் என்று அவர் பேசினார்.