மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. மார்ச் மாதம் 3-ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில் உஜ்ஜயினி, நர்மதை, ஸ்ரீசைலம் போன்ற இடங்களுக்கு செல்கிறது. மேலும் www.ularail.com என்ற இணையதளம் அல்லது 7305858585 என்ற எண் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே கூறியுள்ளது. அந்த வகையில் மார்ச் மூன்றாம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு ஈரோடு, சேலம், திண்டுக்கல், கரூர், காட்பாடி, பெரம்பூர், ஜோலார்பேட்டை வழியாக மார்ச் 5-ஆம் தேதி அன்று உஜ்ஜயினி சென்று மகா காளீஸ்வரர் வழிபாடு நடத்தப்படுகிறது.

அதன் பின் மார்ச் 6-ஆம் தேதி நர்மனை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், மார்ச் 7-ஆம் தேதி சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், அதனை தொடர்ந்து மார்ச் 9-ஆம் தேதி நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, மார்ச் 10-ஆம் தேதி பீம் சங்கர் பீம் சங்கர சாமி தரிசனம், மார்ச் 11-ஆம் தேதி அவுரங்காபாத் குருஸ்னேஸ்வர தரிசனம், மார்ச் 12-ஆம் தேதி அவுங்நாக்நாத் அவுரங்கநாதர் தரிசனம், மார்ச் 13-ஆம் தேதி பார்லி வைத்தியநாத தரிசனம், மார்ச் 14-ஆம் தேதி ஸ்ரீசைலம் மல்லி காஜுன சாமி தரிசனம் முடித்து சுற்றுலா ரயில் மார்ச் 15-ஆம் தேதி மதுரை வந்து சேர்கிறது. இந்த ரயில்களில் கட்டணம், உணவு, தங்குமிடம் மற்றும் உள்ளூர் பேருந்து கட்டணம் உட்பட ஒரு நபருக்கு ரூ.23,400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.