பீகார் மாநிலம் முங்கர் அருகே நடந்து கடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. பயணிகள் ரயிலில் சுமார் 50 கிமீ வேகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அந்த ரயிலில் இருந்த ஒருவரிடம் செல்போனை பறித்த ஒரு திருடன், ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடியே தப்பிச் சென்றார். ரயில் அப்போது ஒரு ஆற்றுப் பாலத்தின் மீது செல்லும் நேரமாதலால், திருடன் ரயிலின் படிக்கட்டின் அடியில் ஒட்டிக்கொண்டு பயணித்து, பின்னர் முட்புதர்களால் சூழ்ந்த பகுதியில் குதித்து தப்பியுள்ளார்.

 

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரயிலில் இருந்த மற்றொரு பயணி வீடியோ பதிவு செய்ததால், திருடனின் செயல்முறை முழுமையாக பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.