திரைப்படக் காட்சியைப் போலவே பரபரப்பான ஒரு சம்பவம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள பஜாஜ் நகர் பகுதியில் அரங்கேறியது. பர்கத் நகர் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகல் வேளையில், கடை வீதிக்குச் சென்ற ஒரு பெண்ணிடம் கொள்ளை நடந்தது. சாலையின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் முழுவதுமாகப் பதிவாகியுள்ளது.
கேமராவின் காட்சியில், கையில் மடித்த ஒரு ஜாக்கெட்டை வைத்துக்கொண்டு, ஒரு பெண் தனது கைப்பையுடன் சாலையைக் கடந்து செல்கிறார். அப்போது அவர் தனது ஜாக்கெட்டை அணிய முயலும்போது, கவனக்குறைவாக ஒரு கட்டுப் பணத்தை கீழே தவறவிட்டுவிடுகிறார். அதை அவர் உணராமல் தொடர்ந்து நடந்து செல்கிறார்.
जयपुर के बरकत नगर में दिनदहाड़े चोरी की वारदात।शॉपिंग करने आई महिला के जैकेट से 50 हजार सड़क पर गिरे।दो बाइक सवार युवकों ने नोटों की गड्डी पर डाली नजर।
एक युवक बाइक से कूदकर गड्डी उठाकर भागा।महिला ने दौड़कर पकड़ने की कोशिश की, लेकिन आरोपी फरार।वारदात कल शाम 4:45 बजे हुई। पूरी… pic.twitter.com/FssUpyYYoY— Roshan sharma (@roshansharma_j) December 5, 2025
சாலையில் கீழே கிடந்த பணக் கட்டை கவனித்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே வந்துள்ளனர். அவர்கள் சிறிது தூரம் சென்று பைக்கை நிறுத்திவிட்டு, கீழே கிடந்த பணத்தை எடுத்துக்கொண்டு, அந்தப் பெண்ணின் கண் முன்பே வேகமாகச் சென்றுவிடுகின்றனர். சற்று நேரத்தில் பணத்தைக் காணாமல் தவித்த அந்தப் பெண், உடனடியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களைத் துரத்த ஆரம்பித்தார்.
இருப்பினும், சாலையின் நெரிசல் காரணமாக அவரால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்துவிட்டனர். திருமணச் செலவுக்காக ஜெய்ப்பூருக்கு வந்திருந்த அந்தப் பெண் மற்றும் அவரது மகள் பர்கத் நகரில் கடைகளைக் கடக்கும்போது, ஜாக்கெட்டை சரி செய்த நேரத்தில் ரூ. 50,000 இருந்த பணக்கட்டு நழுவி கீழே விழுந்துள்ளது என காவல் அதிகாரி பூனம் சவுதாரி பின்னர் விளக்கினார்.
இதுகுறித்து பஜாஜ் நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார். குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
