டென்பசாரில் இருந்து பிரிஸ்பேனுக்கு சென்ற விர்ஜின் ஆஸ்திரேலியா விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பயணிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. விமானத்தில் உள்ள அனைத்து டாய்லெட்டுகளும் பழுதடைந்ததால், பயணிகள் பாட்டில்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம், பயணிகளுக்கு அவமானகரமான மற்றும் துயரமான அனுபவமாக அமைந்தது. விமானத்தில் ஏற்பட்ட சிறுநீரின் துர்நாற்றம் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

போயிங் 737 மேக்ஸ் 8 விமானம், டென்பசாரில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டது. ஆனால், 6 மணி நேர பயணத்தின் கடைசி மூன்று மணி நேரத்தில், டாய்லெட்டுகள் பழுதடைந்ததால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

புறப்படுவதற்கு முன்பே ஒரு டாய்லெட் பராமரிப்பு பிரச்சனை காரணமாக மூடப்பட்டிருந்தது. பயணத்தின் போது மற்ற டாய்லெட்டுகளும் வேலை செய்யாமல் போனதால், ஒரு முதிய பெண்மணி உட்பட பயணிகள் பொது இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனம் இதற்காக மன்னிப்பு கேட்டு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஃபிளைட் கிரெடிட் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.