
அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதியன்று டெக்சாஸின் ஹுஸ்டனில் உள்ள வில்லியம் பி ஹாபி விமான நிலையத்திலிருந்து அரிசோனாவின் பீனிக்ஸ்க்கு சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் சென்றது. அப்போது அதில் பயணித்த பெண் ஒருவர் நிர்வாணமாக கத்திக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் குழந்தைகள் உட்பட மற்ற பயணிகள் முன்னிலையில் பெண் ஒருவர் ஆடைகளை அவிழ்த்துவிட்ட படி கத்திக் கொண்டு ஓடுகிறார்.
மேலும் அவர் கத்திக் கொண்டே விமானி அறையின் கதவை தட்டுகிறார். அதற்கு முன்பு விமான பணிப்பெண்களை அவர் திட்டியதாகவும், தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறியதாகவும் விமானத்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமானத்தில் 25 நிமிடங்கள் நிகழ்ந்துள்ளது. அதன் பின் ஹுஸ்டனின் ஹாபி விமான நிலையத்தில் அந்தப் பெண் போர்வையால் மூடி அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மனநல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாவும் கூறப்படுகிறது.