சமூக வலைதளங்களில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகிக் கொண்டே இருக்கின்றன. சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன, சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். ஆனால், சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. அப்படித்தான் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களிடம் அட்டகாசமான வரவேற்பை பெற்று வருகிறது. சாதாரண சிக்னல் மீறல் என்றால், போலீஸ் வந்து பைன்ஸ் போடுவார்கள். ஆனால் இந்த வீடியோவில் கிடைக்கும் “சிக்னல் தர்மஅடி” தான் ஆச்சரியப்படும் விஷயமாக உள்ளது.
“ज़ेबरा क्रॉसिंग पर बाइक भगाना, मतलब राहगीर को कुचलना ट्रैफिक पुलिस ने यही सबक सिखाया, pic.twitter.com/c5FyXtbbcX
— Sajid Tyagi (@ItyagiSajid) August 25, 2025
வீடியோவில் இரண்டு பேர் பைக்கில் சிக்னலில் நின்று காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஒருவர், சிக்னலை மீறி நேராக பாதசாரிகள் கடப்பதற்கான வரிக்கோட்டுப் பாதையை கடக்க முயற்சிக்கிறார். இதைக் கண்ட ஒருவர், திடீரென்று ஓடி வந்து, அந்த சிக்னல் மீறியவரது பைக்கில் பாய்ந்து ஏறி, அவருடைய தலையில் மெதுவாக அடிக்க ஆரம்பிக்கிறார். அவர் ஹெல்மெட் மீது தான் அடித்தார். ஆனால் அந்த அவமானம் தான் கடுமையான பாடமாக மாறுகிறது. இதைப் பார்த்த பிற பயணிகளும், சும்மா நின்று கொண்டிருந்தனர்.
இந்த வீடியோவை “@ItyagiSajid” என்ற X பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். நொடிகளில் வைரலாக பரவியுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது போல தண்டனை இருந்தா யாருமே சிக்னல் மீற மாட்டாங்க”, “தலையில அடிச்சா தான் கவனிப்பாங்களா?” என்ற வகையில் கமெண்ட்களால் சூழ்ந்துள்ளனர். மற்றொருவர், “சிக்னல் மீறினா போலீசா வரமாட்டாங்க, நேக்ஸ்ட் இதுபோல யாராவது யாராவது வருவாங்க போல இருக்கே!” என்று பதிவிட்டுள்ளார்.
