கேரள மாநிலம் கொல்லத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை கண்டித்து, ஒரு மாவுக்கடைக்காரர் நூதன முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இவர், மின்வாரிய அலுவலகத்தின் முன்பு தனது உடலில் புளித்த மாவை ஊற்றி குளித்து, தனது தொழிலை பாதிக்கும் முறையிலான மின் தடைகளை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் விற்பனைக்கு தயாரான மாவு, மின் தடையால் பாழடைவதாகவும், இதனால் ரூ.10,000 இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடமும் அவர் புகார் அளித்துள்ளார். கடைகாரரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.