சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்து பலரது மனங்களையும் வென்றுள்ளது. அந்த வீடியோவில், பழக்கூடையைச் சுமந்து சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழ, அவர் வைத்திருந்த பழங்கள் அனைத்தும் தரையில் சிதறுகின்றன.
That’s what a healthy society can look like… pic.twitter.com/NjFED1E0nl
— A Man Of Memes (@RickyDoggin) December 23, 2025
பொதுவாக இது போன்ற சூழல்களில் வேடிக்கை பார்ப்பதோ அல்லது சிதறிய பொருட்களைத் திருடிச் செல்வதோ நடக்கும் நிலையில், அங்கு இருந்த மக்கள் அனைவரும் உடனடியாகத் திரண்டு வந்து அந்த நபருக்கு உதவியதுடன், சிதறிய பழங்களைச் சேகரித்துக் கூடைக்குள் அடுக்கி வழங்கினர்.
ஒரு ஆரோக்கியமான சமூகம் என்பது ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதில்தான் அடங்கியுள்ளது என்பதை பறைசாற்றும் இந்த நெகிழ்ச்சியான காட்சியை, எக்ஸ் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
