
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார்.
அவர் மருத்துவமனையில் இருந்த நர்ஸ் மற்றும் டாக்டரிடம் நோயாளிக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனை தடுக்க வந்த செக்யூரிட்டியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவ அதிகாரி இன்பராஜ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் பாண்டியன் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.