
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில் சிக்கினர்.
உடனடியாக பதுங்கியிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூட்டுக் கொள்ளை நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் கதிர்வேல், வெங்கடேசன், முனீஸ்வரன், முனியசாமி, மற்றும் வசந்தகுமார் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.