செனகலைச் சேர்ந்த பிரபல அமெரிக்கப் பாடகர் ஏகான், தனது இந்தியா டூர் 2025 சுற்றுப்பயணத்தின்போது, கடந்த நவம்பர் 14-ஆம் தேதி பெங்களூருவில் நடத்திய இசை நிகழ்ச்சியில் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று நடந்தது. ஏகான் தனது புகழ்பெற்ற பாடலான ‘செக்ஸி பிட்ச்’ பாடலை VIP பிரிவில் பாடிக்கொண்டிருந்தபோது, ரசிகர்கள் சிலர் ஏகானின் பேன்ட்டை இழுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஜுமைர் காஜா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்த இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
ஏகான் அந்த நேரத்தில் பலமுறை தனது பேன்ட்டை சரிசெய்தபடியே பாடலைத் தொடர்ந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்ட சமூக ஊடகப் பயனர்கள், சர்வதேசக் கலைஞரை இவ்வாறு அவமதிப்பது மற்றும் தொந்தரவு கொடுப்பது மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது மரியாதைக் குறைவான செயல் என்றும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் தொடங்கிய தனது சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டத்திற்காக, ஏகான் தனது மனைவி டோமேகா தியாம் மற்றும் குழுவினருடன் தற்போது மும்பைக்கு வருகை தந்துள்ளார்.
