போர்ச்சுகல் நாட்டில் போபி என்கிற நாய் 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நாய் ரபியிரோரியோ அர்ஜென்டிஜோ என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்த இனத்தைச் சேர்ந்த நாய்கள் வழக்கமாக 12 முதல் 14 வயது வரை மட்டுமே வாழக்கூடியது. ஆனால் போபி என்கிற நாய் 30 வருடம் கடந்து 226 நாட்கள் வாழ்ந்துள்ளது.

இந்த நாயை வளர்த்து வரும் நபர் கூறியதாவது “நான் என்ன சாப்பிடுகிறேனோ அதையே போபிக்கும் உணவாக அளிப்பேன்” என்று கூறியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த 1939 ஆம் ஆண்டு 29 வயது வரை வாழ்ந்து ஒரு நாய் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருந்த நிலையில் தற்போது போபி அதன் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.