உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும் இருக்கிறது. இதை எதிர்த்து மதம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவங்களிலும் போஸ்டர் வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராமநாதபுரத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரில் காதலரின் பெயரால் கற்பு சூறையாட ஒரு தினம் தேவையா என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.