தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம், மருந்து கடை, பூக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது பல்வேறு கடைகளில் பயன்பாட்டில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை அவர்கள் பயமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அதனை மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் தினமும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.