ஆன்மாக்கள் பற்றிய கருத்துக்கள் எப்போதும் சுவாரஸ்யமான தலைப்பாகவே இருக்கும் நிலையில், அவற்றின் இருப்பை நிரூபிப்பதாகக் கூறி ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மலேசியாவின் லபுவான் (Labuan, Malaysia) நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்தக் காட்சியில், ஒரு நோயாளி படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் சிறுவன் வடிவில் ஒரு கருப்பு நிழல் (Black Shadow) தெரிவதைக் காண முடிகிறது. அதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
View this post on Instagram
மருத்துவமனையில் உள்ள பல செவிலியர்கள் (நார்ஸ்கள்) தாங்கள் குழந்தையின் ஆவியைப் பார்த்ததாகத் தெரிவித்த நிலையில், அந்தக் கட்டிலில் இருந்த பெண் நோயாளியும் ஒரு சிறுவனைப் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
இந்த ஆவியைப் பார்த்ததாகக் கூறிய அந்தப் பெண் நோயாளி, அடுத்த நாளே உயிரிழந்ததால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிசிடிவி காட்சிகளைப் பார்த்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்தத் திகிலூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
