புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம் புது தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா வளர்க்கும் பன்றிகள் ஜெயந்தி என்பவரது வயல் பகுதிக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஜெயந்தி பலமுறை வயிலுக்கு பன்றிகள் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு கார்த்திகாவிடம் கூறியுள்ளார்.
ஆனாலும் அவர் கேட்கவில்லை. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வயலில் இருந்த விஷம் கலந்த உணவு பொருட்களை சாப்பிட்ட 6 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.